- Advertisement -
Home International ரஷ்யாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது; ஆய்வில் தகவல்!

ரஷ்யாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது; ஆய்வில் தகவல்!

- Advertisement -

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்து பாதுகாப்பானது என முதற்கட்டச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதனை நடைபெற்று வருகிறது.

இதன் முதற்கட்டச் சோதனை முடிவுகள் பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ‘தலான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சோதனையில் 42 நாட்களாகக் கிடைத்த தரவுகளின்படி வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், ‘நோயைக் குணப்படுத்துவதற்கான பிறபொருளெதிரியை 21 நாட்களில் தூண்டுவதாகவும், இந்த மருந்தைச் செலுத்தியதில் எந்த எதிர்மறை விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 76 பேருக்கு மருந்து செலுத்தப்பட்டதில், மிகவும் பாதுகாப்பானது எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உறைந்த நிலையில் உள்ள மருந்து, உறைந்து உலர்ந்த நிலையில் உள்ள மருந்து என இருவகையில் செலுத்திப் பார்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

உறைந்த மருந்து பெருமளவில் தயாரித்துப் பயன்படுத்தவும், உலக அளவில் விற்பனை செய்வதற்கும் ஏற்றது எனக் கருதியுள்ளனர். உறைந்து உலர்ந்த நிலை மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் என்பதால் இதைப் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் செல்லும்போது ஆன்டிபாடி, டி செல் ஆகிய இருவகைகளிலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டிக் கிருமியைத் தாக்கி அழிப்பதாகவும் ஆய்வுக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை பல்வேறு கட்டங்களாக மனிதர்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here