- Advertisement -
Home Srilanka வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்

வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்

- Advertisement -

இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சேய்பி, இத்தாலி மற்றும் நெதர்லாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், ருமேனியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தூதரகங்களின் அலுவல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தனவிற்கு வாழ்த்துத்தெரிவித்த பிரதிநிதிகள், தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை நெருக்கமாகச் செயலாற்றி வருவது குறித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். மேலும் இதன்போது இலங்கையின் மிகமுக்கியமான ஏற்றுமதிச்சந்தையாக ஐரோப்பா விளங்குவதுடன் இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் என்பனவும் அதனூடாகவே அதிகளவில் கிடைக்கப்பெறுவது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை மிகவும் சிறப்பாகச் செயற்பட்டிருப்பதாகப் பாராட்டுத்தெரிவித்த டெனிஸ் சேய்பி, இதன் விளைவாக இலங்கையில் விமானநிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் எவ்வித அச்சமுமின்றி ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகைதரக்கூடிய நிலை உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here