- Advertisement -
Home Srilanka '19 ஐ விட 20 சிறந்தது' சவாலுக்கு உட்படுத்தினால் அரசாங்கம் தடுக்காது என்கிறார் ரோஹித அபேவர்தன

’19 ஐ விட 20 சிறந்தது’ சவாலுக்கு உட்படுத்தினால் அரசாங்கம் தடுக்காது என்கிறார் ரோஹித அபேவர்தன

- Advertisement -

அரசியலமைப்பின் 20வது திருத்ததை எதிர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தின் சவாலுக்குட்படுத்த முடியும். எவ்வித தடைகளையும் அரசாங்கம் ஏற்படுத்தாது. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை காட்டியிலும் 20வது திருத்தம் சிறந்ததாகவே உள்ளது என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில், அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டுக்கு பொருந்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தம், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்கினோம். இதனை கருத்திற் கொண்டே பெரும்பான்மையின மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான தலைவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே அரசியலமைப்பின் 20வது திருத்தம் உருவாக்கப்பட்டு சட்டமூல வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறைப்பாடுகள் காணப்படுமாயின் எதிர் தரப்பினர் சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யலாம். எவ்வித தடைகளையும் அரசாங்கம் ஏற்படுத்தாது.

ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகம் முறையாக இடம் பெற வேண்டும். அரசியலமைப்பின் 19வது திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தை மாத்திரமல்ல ஏனைய துறைகளின் அதிகாரங்களையும் மலினப்படுத்தியது . இதன் பெறுபேறு பாரதூரமாக அமைந்தது. இவ்வாறான நிலைமை இனியொருபோதும் ஏற்படாது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில் இன்று(21) முற்பகல் சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி திரிவதாக...

புராதன சிலையொன்றை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா...

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு . கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார...

பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் ராஜபக்சே பங்கேற்கும் இரு தரப்பு மாநாடு காணொளி மூலம் நடத்த ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சேவும் பங்கேற்கும் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் விதமாக...

ஐ.பி.எல்.கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். கோப்பையை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here