- Advertisement -
Home International 100 ஆண்டுகளில் 3-வது முறையாக தென்பட்ட உலகின் பெரிய திமிங்கலம்.. மெய்சிலிர்த்த தருணத்தைப் பகிரும் புகைப்படக்...

100 ஆண்டுகளில் 3-வது முறையாக தென்பட்ட உலகின் பெரிய திமிங்கலம்.. மெய்சிலிர்த்த தருணத்தைப் பகிரும் புகைப்படக் கலைஞர்.. (வீடியோ)

- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி அருகேவுள்ள கடற்கரை பகுதியில் நீலநிற திமிங்கலம் ஒன்று வெளிப்பட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த நீலநிற திமிங்கலம் தென்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் கேப் சோலேண்டர் பகுதியில் நீலநிற திமிங்கலத்தை பார்த்ததாக கடல்வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீலத் திமிங்கலம் 100 டன் எடைக்கும் அதிகமானது என ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

முன்பு இரண்டு முறையும் ஆதாரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த முறை புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டு விஷயம் இந்த படம் பரவலாக பரவி புகழ்பெற்று வருகிறது. இந்த நீலநிற திமிங்கலம் உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் என்று கருதப்படுகிறது. இதனை சிட்னியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சியான் கே என்பவர் படம்பிடித்துள்ளார்.

கடலின் மேல்புறத்தில் இருந்தவாறே படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எந்த இடத்தில் படம்பிடிப்பது என்றே தெரியவில்லை. எனக்கு அந்த நொடி பேசவும் முடியவில்லை. ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான விஷயங்கள் தோன்றி மறைந்ததைப் போல் இருந்தது. வழக்கமான எனது வேலை ஒன்றுக்காக மரவுபிராவில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்’ என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதன் எடையைப் பற்றி கூற வேண்டுமென்றால், ‘அதன் நாக்கு மட்டுமே ஒரு யானையின் எடை இருக்கும். அதன் இதயம் ஒரு காரின் எடைக்கு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் கௌரவிப்பு நிகழ்வு.

(யாழ் லக்சன்) யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மனி சண்முகதாஸ் அவர்களுக்கான விசேட கௌரவிப்பு நிகழ்வானது நேற்றையதினம்(21.09.2020)மாலை 04.30...

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – மத்திய மாகாண ஆளுனர்

கண்டி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் துரிதமாக ஆராய்வதோடு, அவற்றில் அபாயமுடைய கட்டடங்கள் காணப்படுமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை...

அதாவுல்லாவின் உடையால் சபையில் வெடித்தது சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அணிந்திருந்த உடைக்கு எதிர்ப்புத் தொரிவித்து பாராளுமன்றில் இன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டங்களை மீறி அதாவுல்ல உடையணிந்திருருந்ததாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அவரை சபையிலிருந்து...

முகப்புத்தக களியாட்டத்தில் போதைப்பொருட்களுடன் சிக்கிய 16 பேர் கைது

மாதுருஓயா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகப்புத்தக களியாட்ட விருந்திற்கு சென்ற 16 இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பொலன்னறுவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஒருவகை போதைப்பொருள் 33, 17 கிராம்,...

பிரபல நடிகர் மரணம்; அதிர்ச்சியில் சினித்துறையினர்!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த ரூபன், தனது 54 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். அவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் விஜய்யின் கில்லி, தில், தூள் உள்பட பல படங்களில்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here