- Advertisement -
Home Srilanka MT New Diamond கப்பல் பணியாளர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

MT New Diamond கப்பல் பணியாளர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

- Advertisement -

MT New Diamond கப்பலில் பணியாற்றிய 20 பேர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் .

இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அவர்கள் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

MT New Diamond கப்பலில் தீ பரவியதை அடுத்து, அதிலிருந்து மீட்கப்பட்ட பணியாளர்கள் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிதுரல கப்பலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்துச்சென்று அங்கிருந்து தனிமைப்படுத்தலுக்காக காலிக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக கடற்படைத் தளபதி கூறினார்.

அம்பாறை – சங்கமன்கண்டி கரையிலிருந்து 30 கடல் மைல் தூரத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் பலத்த காற்று வீசுவதாகவும், இதனால் கப்பலின் உட்புறத்தில் கட்டுபடுத்தப்பட்ட தீ நேற்று மாலை தொடக்கம் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.

குறித்த கப்பலில் இன்றும் இடைக்கிடையே தீ பரவியதாகவும் தொடர்ந்தும் தீயைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here