- Advertisement -
Home Srilanka இரா.சாணக்கியனுக்கு நாடாளுமன்றத்தில் உயர் பதவி!

இரா.சாணக்கியனுக்கு நாடாளுமன்றத்தில் உயர் பதவி!

- Advertisement -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவருக்கு சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனது நாடாளுமன்ற கன்னி உரையில் நாடாளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்றிய இரா.சாணக்கியன் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தார்.

குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற இரா.சாாணக்கியனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

சமூக வலைத்தளங்களிலும் அவரது கன்னியுரை வைரலாகியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த உயர் பதவியானது அவருடைய மும்மொழி திறமைக்கும் ஆளுமைக்கும் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இரா.சாணக்கியன் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது சிறிது நேரம் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here