- Advertisement -
Home Srilanka புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள்

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள்

- Advertisement -

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை இங்கு உற்பத்தி செய்து அவற்றில் தன்னிறைவு காணும் விவசாய புரட்சியொன்றை வடக்கிலிருந்து ஆரமபிக்க இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் 15 ஆம் திகதி வடக்கிலுள்ள 400 விவசாய, அமைப்புகளை சந்தித்து தேவையான ஊக்குவிப்புகளையும் உதவிகளையும் வழங்கி விவசாயத்துறையில் தன்னிறைவு காண திட்டம் தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனுடன் இணைந்ததாக வடக்கிலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள், அங்கவீனமுற்றோர். புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் போன்றோருக்கு சுயதொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்ப காலத்தில் கிழங்கு,வெங்காயம்.மிளகாய்,பால் உற்பத்திகளில் வடபகுதி முன்னணியிலிருந்தது. யுத்தத்தின் பின்னர் பின்னடைவு ஏற்பட்டது.

இன்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அநேக உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்து விவசாய புரட்சியொன்றை ஏற்படுத்த பிரதமர் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனை வடக்கிலிருந்து ஆரம்பிக்குமாறும் அவர் கோரினார்.இதற்கமையவே இந்தத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கில் ஆரம்பிக்கப்படுகிறது.

அங்குள்ள விவசாயிகள்,பால் உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க தேவையான உதவிகளை வழங்கவும் இருக்கிறோம்.பால் உற்பத்திகளும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்தவும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படும்.

அடுத்து ஏனைய பிரதேசங்களிலும் இந்த விவசாய புரட்சி முன்னெடுக்கப்படும்.எதிர்வரும் 03 வருட காலத்தினுள் பல உணவுப் பொருட்களில் தன்னிறைவு காண திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here