- Advertisement -
Home Srilanka மட்டக்களப்பு சத்துரக்கொண்டான் படுகொலை நினைவு தினம் இன்று !

மட்டக்களப்பு சத்துரக்கொண்டான் படுகொலை நினைவு தினம் இன்று !

- Advertisement -

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் இன்று 09 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு உணர்வுவூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துக்ருக்கொண்டான் பனிச்சையடியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனியச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுவளைப்பின்போது சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என 188க்கும் அதிகமானோர் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அனைவரும் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக அதில் இருந்து தப்பி வந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அது படுகொலையாக கருதப்பட்டு ஆண்டுதோறும்
பனிச்சையடி தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்த உறவுகள், அரசியல்வாதிகளினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் போது பெருமளவான பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Batti 3 Batti 4 Batti 5 Batti 1 Batti 6 Batti 7 Batti 2

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

சாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...

உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா!!

தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...

எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here