- Advertisement -
Home Srilanka வவுனியாவில் கோர சம்பவம் – குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பம்!

வவுனியாவில் கோர சம்பவம் – குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பம்!

- Advertisement -

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளார்.

நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாய காணியில் இன்று (08) மதியம் 12.30 மணியளவில் குளவி கொட்டுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விவசாய காணியினை சுத்தம் செய்வதாக ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாய், இரு குழந்தைகளுடன் அவரின் மகளும் சென்றுள்ளனர். காணியில் இருந்த மரம் ஒன்றினை வெட்டிய சமயத்தில் மரத்தினுள் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து குளவிகள் அவர்கள் நால்வர் மீது கொட்டியுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய அவர்கள் அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாய் (வயது- 61), மகள் (வயது-36) , மகளின் பிள்ளைகள் (வயது -03) , (வயது- 3மாதம்) ஆகியவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரப்பட்டது.

இந்நிலையில் 6 ஆம் வாட்டில் அனுமதிப்பட்டிருந்த 3 வயது சிறுமி இன்று (08 ) மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படுகாயமடைந்த தாய், மகள், மகளின் 3மாத குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

சாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...

உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா!!

தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...

எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here