- Advertisement -
Home Srilanka 350/- ரூபா விலையில் காய்கறிகளின் நிவாரணப் பொதி- அரசாங்கத்தின் திட்டம் அறிமுகம்!

350/- ரூபா விலையில் காய்கறிகளின் நிவாரணப் பொதி- அரசாங்கத்தின் திட்டம் அறிமுகம்!

- Advertisement -

தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் 350/- ரூபா என்ற
சலுகை விலையில் காய்கறிகளின் நிவாரணப் பொதியை நுகர்வோருக்கு விநியோகிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

காய்கறிகளின் பொதிகளில் கரட், உள்ளூர் உருளைக்கிழங்கு, பீட், தக்காளி, லீக்ஸ் மற்றும் நோ-கோல் என 6 வகையான காய்கறிகள் அடங்கியிருக்கும்.

இந்த காய்கறிகளின் சந்தை விலை 700/- ரூபாவாக இருப்பினும், ஜனாதிபதியின் தேசிய கொள்கை கட்டமைப்பின் கீழ் இதனை 350/- ரூபா என்ற சலுகை விலையில் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விநியோகத்தை தேசிய உணவு மேம்பாட்டு அதிகாரசபை, விவசாய மேம்பாட்டு நிலையங்கள் மூலம் மேற்கொள்கிறது,

விவசாயிகளிடமிருந்து எந்தவொரு இடைத்தரகர்களும் இல்லாமல் கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறிகளே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த மரக்கறி நிவாரணப்பொதி திட்டம் புறக்கோட்டை, மருதானை தொடரூந்து நிலையங்கள், இசுருபயா, சௌசரிபாய, செத்சிறிபாய மற்றும் நுகேகொட ஆகிய இடங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப்பொதிகள் கண்டியில் ஹடபிம அதிகாரசபையின் பங்களிப்புடன் மூன்று இடங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here