- Advertisement -
Home Uncategorized MT - New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது! கடற்படை அறிவிப்பு

MT – New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது! கடற்படை அறிவிப்பு

- Advertisement -

சீரற்ற வானிலை காரணமாக MT – New Diamond கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கப்பலில் இருந்து 1 கி.மீ தூரத்திற்கு ஒரு குறுகிய டீசல் எண்ணெய் கசிவு அவதானிப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, தீயணைப்பு குழுக்கள் தீயை அணைக்க கடல் நீரின் அளவை தொடர்ந்து அதிகரித்தன. இதன் விளைவாக, கப்பலின் இயந்திர அறையில் கடல் நீர் நிரம்பியிருந்தது.

இதன்போது இயந்திர அறைக்கு அருகில் சிதைந்த தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசல் நீரில் கலந்து கப்பலில் இருந்து வெளியேறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தநிலையில் அனர்த்தத்துக்கு உள்ளான கப்பலின் எண்ணெய் சேமிப்பகம் இன்னும் தீயில் இருந்து பாதுகாப்பாகவே உள்ளது என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை மத்தளை வானூர்தி நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் வானூர்தி நேற்று பிற்பகல் டீசல் எரிபொருள் கசிவு காணப்பட்ட பகுதிக்கு சென்று இரசாயன கலவைத்தெளிப்பில் ஈடுபட்டது.

இந்த கலவை குறித்த கசிவியினால் கடல் சூழலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைப்பதற்காக தெளிக்கப்பட்டது.
மேலும், கடல் சூழலில் தீவிபத்துகளின் தாக்கங்களை அறிய, கடல் நீர் மாதிரிகள் சேகரிக்க நேற்று காலை தீயினால் சேதமடைந்த கப்பலின் இடத்திற்கு ஒரு ஆராய்ச்சி குழு சென்றது.

தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டவுடன், தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா), கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் மற்றும் றுஹூனு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு, தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை அனர்த்தத்துக்கு உள்ளான எண்ணெய் கப்பல் இப்போது இலங்கையின் கிழக்கு சங்கமன்கண்டியில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் உள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here