- Advertisement -
Home Srilanka இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

- Advertisement -

போதைப்பொருள் கடத்தலில் இராணுவம் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் தலமைக் காரியாலயத்திற்கு இராணுவத் தளபதி விஜயம் செய்தார்.

இதன்போது இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்த இராணுவத் தளபதி அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி,கொவிட் 19 இன் தாக்கம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில் இலங்கை இராணுவமானது சிரமங்களை பாராது கடமைகளில் ஈடுபட்டிருந்தது.

இதன் காரணமாக நாட்டில் குறித்த நோய்த்தொற்றானது சமூகப் பரவலடையாது பாதுகாக்க முடிந்தது.
அதற்காக நன்றி தெரிவிக்கவே ஜனாதிபதி மற்றும் பிரதமரது பணிப்புரைக்கு அமைவாக இவ்விஜயத்தை மேற்கொண்டேன்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் பல தனிமைப்படுத்தல் முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அவற்றில் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பிவந்த எம் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை விடயங்களையும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

அத்துடன், போதைப்பொருள் பாவனை மற்றும் அதனை சட்டவிரோதமான முறையில் கடத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகின்றன.

அவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாகவே கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.625.0.560.320.160.600.053.800.700.160.90 1

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here