- Advertisement -
Home Srilanka இலங்கையில் சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாநகரசபையில் யுனிசேப் ஆரம்பித்தது !

இலங்கையில் சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாநகரசபையில் யுனிசேப் ஆரம்பித்தது !

- Advertisement -

தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் செயற்றிட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபையில் யுனிசேப் ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று(புதன்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மணிவண்ணன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசேப்) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன், சிரேஸ்ட திட்ட வரைஞர் லூயிஸ் மொரீரா டானியல், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் வி.தர்சன, மாநகர அணையாளர் சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையினை சிறுவர் சினேகமிக்க மாநகரசபையாக மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகில் தென்கொரியால் உள்ள ஒரு உள்ளுராட்சிமன்றத்தில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றிபெற்ற நிலையில் இலங்கையில் மட்டக்களப்பு மாநகரசபை தெரிவுசெய்யப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி, அவர்களின் தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் அன்றாடம் விரும்பி மேற்கொள்ளும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

யுத்தம், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் என பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ள காரணத்தினால் இந்த மாவட்டத்தினை தெரிவுசெய்ததாக இங்கு கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசேப்) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவிலும் இலங்கையிலும் முதல் சிறுவர் சினேக மாநகராக மட்டக்களப்பு மாநகரசபையினை மாற்றுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.

Batti 9 Batti 10 Batti 11 Batti 8

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here