- Advertisement -
Home Srilanka கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை- நாரா நிறுவன அதிகாரி!!

கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை- நாரா நிறுவன அதிகாரி!!

- Advertisement -

கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைகயில் சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில் பயணித்துக்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து கல்முனை கடற் பரப்பில் சந்தேகத்திற்கிடமான எண்ணெய்ப் படிமங்கள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் அவதானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இதனால் பிரதேச கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வந்த நிலையில் நாரா நிறுவன அதிகாரிகள் உடனடியாக கல்முனை கடற் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு விபத்திற்கு உள்ளான கப்பலில் இருந்து வெளியேறிய எதாவது பதார்த்தங்கள் கடல் நீரில் கலந்துள்ளதா என்பதை கண்டறிய 3 நாட்களாக சமூத்திரிகா பாரிய கப்பல் ஒன்றில் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நாரா நிறுவனத்தினால் பெரிய நீலாணையில் இருந்து ஒலுவில் வரையிலும் அதேபோன்று பொத்துவில், பானமை, திருக்கோவில் ஆகிய கடற்பிரதேசங்களிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த ஆய்வுப் பணிகள் 32 கடல் மைல் தூரம் வரை மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த கடற்பிரதேசத்தில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றிலும் எந்தவிதமான மாற்றங்களையும் அவதானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், பிரதேச கடற்றொழிலாளர்கள் வழமை போன்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் தெரிவித்தனர்.

இதே வேளை குறித்த விடயம் கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here