- Advertisement -
Home Cinema காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்... நடந்தது என்ன?!

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்… நடந்தது என்ன?!

- Advertisement -

42 வயதான வடிவேல் பாலாஜி, 5 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்திருக்கிறார். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் மாரடைப்பு ஏற்பட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

42 வயதான வடிவேல் பாலாஜி, 5 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்திருக்கிறார். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் மாரடைப்பு ஏற்பட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கே மருத்துவச்செலவுகள் அதிகரித்துக்கொண்டே போக, இன்னொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றவர்கள், அங்கும் சரிவர பார்க்கமுடியாமல், அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார் பாலாஜி.

vikatan 2020 09 0ddbdfb6 7b32 46f7 aa84 8ce2c0c79f5e 436426
”பாலாஜி சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர். பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் பண்ற டிப்பார்ட்மென்ட்ல வேலை பார்த்தார். அங்க வேலை பார்த்துக்கிட்டே ‘கலக்கப்போவது யாரு சீசன் 4’, ‘அது இது எது’ நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சார். எப்படி அங்க பிணங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருக்கார்னு ஆச்சர்யமா இருக்கும்.

வடிவேல் மாதிரி பண்ற பல பேர் மத்தியில பாலாஜி மட்டும்தான் நல்லா ரீச்சானார். அதுக்குக் காரணம் வடிவேல் மாதிரி அப்படியே பாலாஜி பண்ணாததுதான். அவரோட மாடுலேஷனை மட்டும் வச்சுக்கிட்டு ஸ்பாட்ல செமையா கலாய்ச்சி வித்தியாசமா பண்ணி எல்லோரையும் சிரிக்கவெச்சிடுவார். அப்படித்தான் பாலாஜி அதிகமான மக்களை ரசிக்க வச்சார்.

vikatan 2020 09 36c560bb 4ca7 4cb5 9e1e a24d13c9f73f 66383156 2227182147398877 2111801347467640832 nஇரண்டு வாரங்களுக்கு முன்னாடி ரெண்டாவது ஹார்ட் அட்டாக் வந்துச்சு. அப்ப கையும் காலும் பேரலைஸ் ஆகிடுச்சு. காசு பிரச்னையால் தொடர்ந்து மருத்துவமனைகளை மாத்திக்கிட்டே இருக்கவேண்டியதா இருந்தது. இன்னைக்கு காலைல அரசு மருத்துவமனையில உயிர் பிரிஞ்சிடுச்சு” என்றார் ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியின் இயக்குநரும், பாலாஜியின் நண்பருமான தாம்சன்.

மறைந்த நடிகர் பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here