- Advertisement -
Home Srilanka அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு நீதிமன்றம் விடுத்த விசேட உத்தரவு!

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு நீதிமன்றம் விடுத்த விசேட உத்தரவு!

- Advertisement -

சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அப்போதைய வர்த்தக அமைச்சராக செயற்பட்ட ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் சதோச நிறுவனத்தின் ஊழியர்கள் 153 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு 40 மில்லியனுக்கும் அதிகளவில் நட்டம் ஏற்பட்டதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here