- Advertisement -
Home Srilanka சருமப்பூச்சு- கிறீம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சருமப்பூச்சு- கிறீம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

- Advertisement -

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சருமப்பூச்சு கிறீம் வகைகள் தொடர்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு செயற்றிட்டமொன்று நாடுபூராகவும் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையானது இந்த செயற்றிட்டத்தை முதலாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டம் வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது கிழக்கு மாகாண பணிப்பாளர ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களான எம்.எம்.இர்ஷாத், பி.ஜீனேஸ்ராஜ், ஏ.சி.ஏ.அஹாத், எம்.எம்.எம்.பஷ்மீர், ஐ.எல்.மர்ஜுன், ஏ.சி.எம்.சஜீத், எம்.எம்.நியாஸ், ஏ.எல்.எம்.சதான், ஏ.பி.எம்.இர்பான் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

இதன்போது குறித்த வியாபார தளங்களுக்குச் சென்று அங்கு வியாபாரிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகின்ற சருமப்பூச்சு கிறீம் வகைகளானது இலங்கையின் தர நிர்ணயத்திற்கமைவாக எவ்வாறான உட்கூறுகள் கொண்டிருக்க வேண்டும், அவ்வகையான சருமப்பூச்சுக்களில் கறீம்களில் பொறிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டதுடன், இன்று சந்தையில் காணப்படும் சருமப்பூச்சு வகைகளில் பெரும்பான்மையானவை சட்ட ரீதியற்ற முறையில் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுவதனால் இதனை பாவிக்கும் மக்களுக்கு பல்வேறு விதமான சரும நோய்கள், பக்க விளைவுகள் தொடர்பாக வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும் இவ்வாறு தடை செய்யப்பட்ட சரும பூச்சு வகைகளை விற்பனை செய்வது, விற்பனைக்கு காட்சிப்படுத்துவது மற்றும் களஞ்சியப்படுத்துவது போன்ற விடயங்கள் தண்டனைக்குரிய குற்றம் என்பதனால் வியாபாரிகள் இவ்வகையான சருமப் பூச்சு கிறீம் வகைகளை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்படுமாக இருந்தால் குறித்த வியாபார நிலையத்துக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படுவதுடன் குறித்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு ஒப்படைக்கப்படும் என கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி ஆர்.எப் அன்வர் சதாத் தெரிவித்துக் கொண்டார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில் இன்று(21) முற்பகல் சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி திரிவதாக...

புராதன சிலையொன்றை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா...

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு . கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார...

பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் ராஜபக்சே பங்கேற்கும் இரு தரப்பு மாநாடு காணொளி மூலம் நடத்த ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சேவும் பங்கேற்கும் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் விதமாக...

ஐ.பி.எல்.கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். கோப்பையை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here