- Advertisement -
Home Srilanka நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

- Advertisement -

நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற அமைச்சர்களுடனான சந்திப்பில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சில தேசிய பாடசாலைகள் பெயரில் மட்டுமே தேசிய பாடசாலைகளான உள்ளன.அவற்றில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தநிலையில் அனைத்து வசதிகளைக்கொண்ட தேசிய பாடசாலைகளை உருவாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பாடசாலை முறையை மேம்படுத்த மாவட்ட கல்வி குழுக்களை நியமிக்க ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களும் இதன்போது முடிவு செய்தனர்.

மாகாண கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

முதலாம் வகுப்புக்காக மாணவர்களை சேர்ப்பது மற்றும் ஆசிரியர் இடமாற்றங்கள் என்பவற்றை தவிர்த்து, பாடசாலை முறையை மேம்படுத்தும் எந்தவொரு செயலிலும் அரசியல்வாதிகள் தலையிட சுதந்திரமாக உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இத்தகைய நடவடிக்கைகள் பொது நன்மைக்காகவே அன்றி, அரசியல் தலையீடாக கருதப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பாடசாலைகளில் அனுபவம் வாய்ந்த, திறமையான ஆசிரியர்களை செயல் அதிபர்களாக நியமிப்பதற்கான சாத்தியம் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here