- Advertisement -
Home Srilanka பாராளுமன்றத்தில் இறுவட்டுக்கள் வழங்குவதால் நிதி வீண்விரயம்

பாராளுமன்றத்தில் இறுவட்டுக்கள் வழங்குவதால் நிதி வீண்விரயம்

- Advertisement -

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் இறுவட்டுக்களால் நிதி வீண்விரயமாகுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு. அதனால் இந்த நடவடிக்கையை நிறுத்தவேண்டும் என ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கருத்து தெரிவித்தனர்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, புத்திக்க பத்திரண எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இந்த விடயங்களை சுற்றிக்காட்டினார்.

இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் இறுவட்டுக்கள் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படுவதில்லை.

இவை வீண்விரயமாக்கப்படுவதை நாங்கள் காண்கின்றோம். அத்துடன் இதற்காக பாரியளவில் நிதி செலவிடப்படுவதுடன் இறுவட்டு போன்றவையினால் சூழலுக்கும் பாதிக்கு ஏற்படுகின்றது.

அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிக்கைகள் வழங்குவதாயின் அதனை இணையத்தளத்தினூடாக வழங்கும் நவீன நடைமுறைகளை பின்பற்றவேண்டும். அதன் மூலம் நிதி விரயமாவதை தடுக்கமுடியும். யாருக்காவது இதன் பிரதிகள் தேவை என்றால் பாராளுமன்ற நூலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அதனால் இந்த நடைமுறையை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த அமைச்சர் மஹிந்த அமரவீர, புத்திக்க பத்திரணவின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். உறுப்பினர்களின் மேசையில் வைக்கப்படும் இறுவட்டுக்களை பாவிப்பவர்கள் மிக குறைவு. உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மடிக்கணனியில் அந்த விடயங்களை உள்வாங்கி இறுவட்டுக்கள் வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு; ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகளை உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இன்று(23) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார்...

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் வகையில் திருத்த சட்டம்

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பொறுப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும்...

மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு...

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடமைப்பு தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பா.உ சாணக்கியன் வீடமைப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here