- Advertisement -
Home Srilanka பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்

பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்

- Advertisement -

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரம் முதல் பாராளுமன்ற அமர்வு நேரங்களில் மாற்றம் செய்ய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10.00மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை இடம்பெறவுள்ளன. பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

செப்டெம்பர் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்களின் கீழ் முன்வைக்கப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழான 12 கட்டளைகளும், 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03 ஒழுங்குவிதிகளும், 02 கட்டளைகளும், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 31 கட்டளைகளும் எதிர்வரும் 22ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான வாய்மூல விடைக்கான கேள்விகள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 வரையான காலம் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், எதிர்வரும் 23ஆம் 24ஆம் திகதிகளில் சபாநாயகரினால் நேற்று முற்பகல் முன்வைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை மற்றும் ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை என்பன விவாதிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 25 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சுரங்கனி எல்லாவல மற்றும் ஆர்.எம்.பி.ரத்னாயக்க ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இன்றைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷமன் கிரியல்ல மற்றும் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, பிரசன்ன ரணதுங்க, அல் சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், கஜயந்த கருணாதில, டிலான் பெரேரா, ரிஷாட் பதியுதீன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here