- Advertisement -
Home Srilanka மட்டக்களப்பு அரச ஹோமியோபதி வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யக் கோரி நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு அரச ஹோமியோபதி வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யக் கோரி நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்

- Advertisement -

மட்டக்களப்பு நகரத்தில் இயங்கி வரும் அரச ஹோமியோபதி வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக மருந்துகள் வழங்கப்படாததையிட்டு நோயாளர்களால் இன்று(11) குறித்த வைத்திய நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2019 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோமியோபதி வைத்திய நிலையத்தில் ஆங்கில மற்றும் ஏனைய மருத்துவ முறைகளில் நோய் குணமடையாத நேயாளர்கள் இவ்வைத்திய முறையில் குணம் கிடைக்கின்றது என்ற நம்பிக்கையில் நாள்தோறும் 40 தொடக்கம் 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த மூன்று, நான்கு மாதங்களாக மருந்துகள் வளங்கப்படவில்லை எனவும், வைத்தியர் மருந்து வரவில்லை நான் என்ன செய்வது என கூறுவதாகவும், மருந்து இல்லை என போட்டு போட்டுள்ளதாகவும், இவ்வைத்தியசாலையில் வேறு வசதிகளும் இல்லை எனவும், இம்மருந்து வகைகளை வேறு எந்த மருந்தகங்களிலும் பெற்றுக் கொள்ள முடியாததினாலும் பொறுமை இழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வைத்திய நிலையத்திற்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி எம்.ஏ.எம்.முனீர் கருத்து வெளியிடுகையில் இலங்கை மருத்துவ சபையின்கீழ் இயங்கிவரும் இவ்வைத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றரை வருட காலத்தில் சுமார் ஐயாயிரம் நோயாளர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சை பயனளிக்கின்றது என்ற உறுதியான நம்பிக்கையில் நாளாந்தம் 40 தொடக்கம் 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுச் செல்வதாகவும், இவ்வைத்திய நிலையம் ஆரம்பிக்கும்போதே 20 வீதமான மருந்துகளுடன்தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் மருந்து பற்றாக்குறை தொடர்பாக இலங்கை மருத்துவ சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், சபை அமைச்சுக்கு அறிவித்திருப்பதாகவும், இவ்வகை மருந்துகள் வரவில்லை அவை கிடைக்கப் பெற்றதும் வழங்கப்படுவதாக அமைச்சும், மருத்துவ சபையும் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஒரு வைத்தியரும் ஒரு மருந்து வழங்குனர் உட்பட இருவர் மாத்திரம் அலுவலக தளபாட வசதிகளுமற்ற நிலையில் மாநகர சபையின் தளபாடங்களுடன் இவ் வைத்திய சிகிச்சை நிலையம் இயங்கி வருகின்றது. புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர் சிசிர ஜயகொடி ஹோமியோபதி வைத்திய முறைமையினை மேம்படுத்தி வருகின்றார். அவர் இவ்வைத்திய முறையினை முன்னிலைப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.

IMG 20200911 101017 696x392 1

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here