- Advertisement -
Home Breaking News வாள்வெட்டுக் குழுத் தலைவர் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பில் கைது

வாள்வெட்டுக் குழுத் தலைவர் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பில் கைது

- Advertisement -

மட்டக்களப்பில் நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த வாள் வெட்டுக்குக்ழுவின் தலைவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கைதுசெய்யச்சென்றபோது பொலிஸார் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்கேணி பகுதியிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராச்சியின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வு விசாரணைப்பிரிவின் பதில் பொறுப்பதிகாரி முகமட் ஜெசூதி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்த கைதினை மேற்கொண்டது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட வாள்வெட்டு குழுவின் தலைவரான 2018 ஆம் ஆண்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியதாக நீதிவான் நீதிமன்றில் வழக்கு நிலைவையில் உள்ள நிலையில் மேலும் ஒன்பது குற்றங்கள் தொடர்பில் வழக்குகள் நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தொடர்பில் பல சிறு குற்றச்சாட்டு முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இவரை கைதுசெய்யச்சென்ற பொலிஸாரை தாக்க முற்பட்ட நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டபோது அவரிடம் இருந்து வாள் ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவருடன் அந்த குழுவினை சேர்ந்த இன்னுமொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவுடன் தொடர்புபட்ட மேலும் நான்கு பிரதான நபர்களும் ஏனைய உறுப்பினர்கள் சிலரையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கடந்த காலத்தில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்துள்ளதுடன் நாவற்கேணி பகுதியில் தனிமையில் வீடுகளில் இருக்கும் பெண்களையும் அச்சுறுத்திவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா உள்ளிட்டு போதைப்பொருள் விற்பனைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் இது தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

batti rowdy 1 batti rowdy 2

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here