- Advertisement -
Home Srilanka பாராளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனை கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் சந்தித்து பேச்சு

பாராளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனை கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் சந்தித்து பேச்சு

- Advertisement -

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனை இலங்கைக்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்( High Commissioner to Canada in Sri Lanka David McKinnon) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இன்று(14) முற்பகல் இடம்பெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் அரசியல் நிலமைகள் தொடர்பாக விரிவாக ஒரு மணித்தியாலம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் குறித்த சந்திப்பு இடம்பெற முன்னர் அப்பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பு பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தை சுற்றி அதிகளவில் போடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கப்பட்டமை தொடர்பில் எமது கட்சிக்குநன்றி தெரிவித்தார்.எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் இடம்பெற உள்ள நிலைமைகளை அறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தார்.

இதனால் இவர்களுடன் இணைந்து எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு எமக்கு கடப்பாடு உள்ளது.நம்பிக்கை தரக்கூடிய சந்திப்பாக இக்கலந்துரையாடல் இருந்தது.ஆரோக்கியமாக இருந்து சந்திப்பு எமது மக்களின் எதிர்காலத்தை மிகவும் கட்டியெழுப்பும் என நம்புகின்றேன் என்றார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here