- Advertisement -
Home Srilanka தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் - கனேடிய தூதுவரிடம் வலியுறுத்தினார் இரா.சாணக்கியன்!

தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் – கனேடிய தூதுவரிடம் வலியுறுத்தினார் இரா.சாணக்கியன்!

- Advertisement -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற
உறுப்பினர் இரா. சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட்
மெக்கின்னன்( High Commissioner to Canada in Sri Lanka David McKinnon) இடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு மூன்று கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான சர்வதேச பார்வையினை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சனைகளைக் கருத்திற் கொண்டு அவற்றுக்கான தீர்வுகள் உள்வாங்கப்படுவதற்காக சர்வேதேச ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். மற்றும் எமது பிரதேசங்களில் காணப்படும் பெண் தலைமை தாங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், பெண் தலைமை தாங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள
குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான திட்ட ஆவணங்களும் இதன்போது இலங்கைக்கான கனேடிய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here