- Advertisement -
Home Lifestyle அடிக்கடி தலை வலியால் அவதிப் படுகிறீர்களா? இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..!

அடிக்கடி தலை வலியால் அவதிப் படுகிறீர்களா? இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..!

- Advertisement -

பொதுவாக பலருக்கு தலைவலி, அதிக வேலை சுமை, லேப் டாப், சிஸ்டம் முன்பு அமர்ந்து பல மணிநேரம் கண்களுக்கு ஓய்வு தராமல் வேலை செய்வதாலும், அதில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்திலும் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

அதே போல், தூக்கம் இன்மை, மற்றும் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கூட அடிக்கடி தலைவலியால் அவதிப்படுவார்கள்.

இவையெல்லாம் தவிர்த்து, சில உணவு வகைகள் கூட உங்கள் தலைவலிக்கு காரணமாக அமையும் .

அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க…

வாழை பழம்: இது செரிமானத்திற்கும், ஊட்ட சத்திற்கும் உகர்ந்ததாக இருந்தாலும், சில நேரங்களில் தலைவலியை உண்டாக்கலாம்.

சீஸ் : சீஸ் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து விரிவுபடுத்தும் தன்மை கொண்டது ஆகவே இதன் அழுத்தம் காரணமாக சில நேரங்களில் நீங்கள் தலை வலியை உணர்வீர்கள்.

அவகடோ : சீஸ் போலவே அவகடோ பழத்தில் உள்ள தைரமின் என்னும் வேதிப்பொருள் இரத்த நாளங்களை சுருங்கி விரியச் செய்யும் அதன் காரணமாக தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

சுவிங்கம்: சுவிங்கம் அதிக நேரம் மெல்லுவதால், வாய், தாடை போன்ற பகுதிகள் ஓய்வில்லாம் அசைவு கொடுத்து கொண்டே இருக்கும். இதுவும் சில சமயங்களில் தலை வலி உண்டாவதற்கான காரணமாக அமைகிறது.

எண்ணையில் பொரித்த உணவுகள்: சிப்ஸ் மற்றும் எண்ணையில் பொரித்த உணவுகள் காற்று அடைபட்ட கவர்களில் பேக் செய்யப்படுவதால், சில கெமிக்கல்கள் கலக்க படுகிறது. இதனால் சில வேதியல் மாற்றங்கள் நிகழ்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

சோயா சார்ஸ்: சுவைக்காக சேர்க்கப்படும் சோயா சாஸ் சில நேரங்களில் தலை வலியை ஏற்படுத்தும்.

குளிர்பானங்கள்: சோடா, மற்றும் கோலா போன்ற குளிர் பானங்களில் செயற்கை இனிப்புகள் சேர்ப்பதால் சில சமயங்களில் அது தலைவலியை ஏற்படுத்தும்.

மது: மது அருந்துபவர்கள் உடலில் நீர் சத்து குறைவதால், அவர்களுக்கு தலை வலி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here