- Advertisement -
Home India அடுத்த 48 மணி நேரத்தில் நடக்கப் போகிற தரமான சம்பவம்..! தமிழக மக்களே உஷார்..!!

அடுத்த 48 மணி நேரத்தில் நடக்கப் போகிற தரமான சம்பவம்..! தமிழக மக்களே உஷார்..!!

- Advertisement -

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வளிமண்டல சுழற்சியாக நீடிக்கின்றது.

இதன் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் சென்னை மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பந்தலூர் (நீலகிரி) 5 சென்டி மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 4 சென்டிமீட்டர் மழையும், சங்கரி துர்க் (சேலம்) அவிநாசி (திருப்பூர்) தலா 3 சென்டிமீட்டர் மழையும், காவேரிப்பாக்கம், (ராணிப்பேட்டை) சிட்டம்பட்டி (மதுரை) சோலையார் (கோவை) தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

செப்டம்பர் 18 ஆம் தேதி மன்னார் வளைகுடா, தென்மேற்கு தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 – 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 19-ஆம் தேதி தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.செப்டம்பர் 20 வட கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 17-9-2020 இரவு 11:30 மணி வரை கடல் உயரம் மூன்று மீட்டர் முதல் 3.8 மீட்டர் வரை எழும்பக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here