- Advertisement -
Home Breaking News கண்டனப் போராட்டத்தில் அரச பேருந்து பணியாளர்கள்!

கண்டனப் போராட்டத்தில் அரச பேருந்து பணியாளர்கள்!

- Advertisement -

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் இன்றைய தினம் காலை பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு, கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடம் மன்னார் நகர சபையினால் நேற்று இரவு அதிரடியாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதோடு, மன்னார் பஸார் பகுதியில் காலை 9 மணியளவில் கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.

மன்னாரில் இருந்து அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிக இடம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் மன்னார் நகர சபையின் புதிய பேருந்து தரிப்பிட பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் பாவனைக்காக குறித்த பேருந்து நிலையம் கையளிக்கப்பட்டது.

பேரூந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் சேவைகள் இணைந்த சேவையாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தனியார் போக்குவரத்துச் சேவைகள் மாத்திரம் இடம் பெற்று வந்த போதும், மன்னார் அரச போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை.

எனினும் மன்னார் நகர சபையிடம் கால அவகாசம் கோரிய நிலையில் தொடர்ச்சியாக தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தில் அரச போக்கு வரத்துச் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோரிய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை மன்னார் நகர சபை நேற்று இரவு அதிரடியாக மூடியுள்ளது.

தங்களுக்கு எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி குறித்த இடம் மூடப்பட்டதை கண்டித்தே இன்றைய தினம் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு,கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மன்னார் பஸார் பகுதியில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது நகர சபை பேரூந்து நிலையமா? மத்திய பேரூந்து நிலையமா?,எங்களுடைய பங்கம் எங்களுக்கு வேண்டும், நகர சபை தலைவரே தன்னிச்சையான போக்கை நிறுத்துங்கள், அரச போக்கு வரத்துச் சபைக்கு நீங்கள் கட்டளை போடுவதா? உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் காலை முதல் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பேரூந்துகள் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

பாடசாலை மாணவர்கள்,அரச,அரச சார்பற்ற திணைக்கள பணியாளர்கள்,பெண்கள், வயோதிபர்கள் என அனைவரும் பாதிப்பை எதிர்நோக்கினர்.

எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் தனியார் போக்குவரத்து சேவைகள் சீரான முறையில் இடம் பெற்றது.

மன்னார் நகர சபைக்கு எதிராக முன் வைத்த கருத்துக்கள் தொடர்பில் உறுதிப்படுத்தும் வகையில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனை தொடர்பு கொண்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.625.0.560.350.390.830.053.800.670.160.91 1 1 625.0.560.350.390.830.053.800.670.160.91 2 1 625.0.560.350.390.830.053.800.670.160.91 3 1 625.0.560.350.390.830.053.800.670.160.91 5 625.0.560.350.390.830.053.800.670.160.91 6 625.0.560.350.390.830.053.800.670.160.91 7 625.0.560.350.390.830.053.800.670.160.91 8

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here