- Advertisement -
Home Lifestyle கழிவறையிலும், குளியலறையிலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

கழிவறையிலும், குளியலறையிலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

- Advertisement -

குளியலறை – தினமும் நாம் பயன்படுத்தும் இடம் குளித்தால் நிச்சயமாய் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால், குளியலறையில் நாம் எவற்றை கவனமாக செய்யவேண்டும்? எவற்றை அங்கு செய்யக்கூடாது என்பதை சரியானவிதத்தில் புரிந்திருக்கிறோம் என்று உறுதியாக கூற இயலாது.

டிஜிட்டல் விஷன் / கெட்டி இமேஜஸ் தினசரி மன அழுத்தத்தை கழுவ உதவும் ஒரு சுத்தமான, ஒழுங்கமைக்கப்பட்ட குளியலறையில் ஒரு ஓய்வு மழை போல் எதுவும் இல்லை.

பொதுவாகவே, நம் வீட்டை சுத்தம் செய்வதைவிட, நம் வீட்டில் இருக்கும் பாத்ரூமை சுத்தம் செய்வதுதான் பெரிய வேலையாக இருக்கும்.

சிலருக்கு கெமிக்கல் கலந்த பொருட்களை வைத்து பாத்ரூமை சுத்தம் செய்யவே முடியாது. மூக்குக்குள் புகுந்து கொள்ளும்.

தொண்டை கட்டிக்கொள்ளும். பாத்ரூமை சுத்தம் செய்வதற்குள், பல பிரச்சனைகளில் அவதிப்படுவார்கள்.

டூத் பிரஷ்

டூத் பிரஷ்ஷை மாதம் ஒரு முறை மாற்ற வேண்டும். கழிவறையும் குளியலறையும் டூத் பிரஷ்ஷை வைப்பதை தவிர்க்க வேண்டும். கழிவறை பக்கத்திலேயே இருப்பதால் பிரஷ்ஷில் கிருமிகள் தொற்றும் பரவும். கடுமையான இருமல் அல்லது தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகு உடனடியாக டூத் பிரஷ்ஷை மாற்றி விட வேண்டும்.

டாய்லெட் சீட்

வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதன் இருக்கைப் பகுதியை மூடி வைக்கும் வசதி உண்டு. எனவே, வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவர்கள் அதை உபயோகித்து முடித்ததும் நன்றாக ஃப்ளஷ் செய்துவிட்டு உட்காரும் பகுதியைக் கழுவிவிட்டு டாய்லெட் சீட்டை மூடி வைக்க வேண்டும். திறந்த நிலையில் வைத்தால் டாய்லெட்டில் உள்ள கிருமிகள் அங்கே உள்ள மற்ற பொருட்களின் மீதும் பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது.

செல்போன்

குளியலறையில் போன் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். நாம் உபயோகிக்கும் போனில்தான் அதிகபட்சமாகக் கிருமித் தொற்றுகள் உருவாகின்றன. போனைப் பயன்படுத்தி முடித்த பிறகு வைக்கும் இடத்திலும் கிருமித் தொற்றுக்கான அபாயங்கள் காத்திருக்கும்.

சோப்பு, ஷாம்பூ

குளியலறையை அடைசல் இன்றி வைத்திருக்க வேண்டும்.

சோப்பு, ஷாம்பூ, கிருமிநாசினிகள் போன்றவற்றை நன்றாக மூடிய நிலையில் வைக்க வேண்டும்.

குளிக்கும் நார்

குளிக்கும்போது மென்மையான நார் கொண்டு உடலைத் தேய்த்து குளிக்க வேண்டும். ரொம்பவும் அழுத்தித் தேய்த்தால் சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் நீங்கி வறண்டுவிடும்.

சீப்பு

தலைமுடியை வாருவதற்கு பிரத்தியேக வகை வகையான சீப்புகளை வைத்திருப்பர். இவற்றை ஒருபோதும் சுத்தம் செய்யவே மாட்டார்கள். நம் தலையிலுள்ள பொடுகுகள் மற்றும் அழுக்கு, உதிர்ந்த முடியோடு சேர்ந்து தலை வாரும் பிரஷ்ஷிலோ, சீப்பிலோ இருக்கக்கூடும். ஆகவே, அவற்றை வாரம் ஒருமுறையாவது நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here