- Advertisement -
Home Breaking News கூண்டோடு சிக்கிய 200 எம்.பி,- எம்.எல்.ஏ.,க்கள்; உச்சநீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

கூண்டோடு சிக்கிய 200 எம்.பி,- எம்.எல்.ஏ.,க்கள்; உச்சநீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

பாஜகவை சேர்ந்த அஸ்வானி உபாத்யாயே என்ற வழக்கறிஞர் நாடு முழுவதும் உள்ள முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக விசாரிக்க கோரி மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள முன்னாள் மற்றும் பதவியிலிருக்கும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீது இருக்கும் வழக்குகளை விசாரணை விசாரித்து விவரங்களை தாக்கல் செய்ய செய்யவும் மாநில மாநில வாரியாக வழக்குகளின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டது.

இதன்படி சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 10ஆம் தேதி நடந்த விசாரணையின்போது மாநில உயர் நீதிமன்றங்கள் 12ஆம் தேதிக்குள் எம்பி எம்எல்ஏக்கள் மீது சிறப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்து விவரங்களை உச்சநீதிமன்றத்திற்கு வழங்குமாறு உத்தரவை பிறப்பித்தது.

மாநில உயர் நீதிமன்றங்கள் வழங்கிய விவரங்களின்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 175 வழக்குகள் எம்பி எம்எல்ஏக்கள் மீது உள்ளன என்றும் சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

வழக்கின் விவரங்களை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிறப்பு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப் படவில்லை என்பதை காட்டுகிறது.

இதனால் பாதி எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

எனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதில் நீதிமன்றங்களில் தெளிவு இல்லாத காரணத்தினால் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றமும் பதவியில் இருக்கும் எம்பி எம்எல்ஏக்களின் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க ஒரு நீதிமன்ற அதிகாரியை அமைக்க கோரி மாவட்டந்தோறும் நியமிக்கலாம்.

இது போன்ற பல கட்டுப்பாடுகளின் கீழ் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்க  உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகள் குறைந்தபட்சம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு; ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகளை உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இன்று(23) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார்...

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் வகையில் திருத்த சட்டம்

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பொறுப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும்...

மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு...

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடமைப்பு தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பா.உ சாணக்கியன் வீடமைப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here