- Advertisement -
Home Cinema ரஜினிக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன் - அண்ணாத்த படத்தின் செம மாஸ் அப்டேட்

ரஜினிக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன் – அண்ணாத்த படத்தின் செம மாஸ் அப்டேட்

- Advertisement -

சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து இயக்க வரும் படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி என திரையுலக பட்டாளமே ஒன்றிணைந்து நடித்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரில் இவர் இசையமைத்திருந்த அண்ணாத்த படத்தின் தீம் மியூசிக் செம வைரலானது.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்குவுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாராவின் காட்சிகள் தான் இதில் முதலில் எடுக்கப்படுமாம்.

அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இப்படத்தின் வில்லனுக்கும் சம்மந்தப்பட்ட காட்சிகள் உருவாகுமாம் என தகவல்கள் கிடைத்துள்ளது.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லாக நடிக்கவிருப்பவர் தெலுங்கு நடிகை கோபிசந்த் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அவர் இப்படத்தில் கமிட்டாகவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தில் தளபதி விஜய்யுக்கு வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப் தான் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லாக கமிட் செய்யப்பட்டுள்ளார் என தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் இவர் தமிழில் ஆரண்யா காண்டம், கோச்சடையான், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு; ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகளை உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இன்று(23) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார்...

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் வகையில் திருத்த சட்டம்

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பொறுப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும்...

மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு...

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடமைப்பு தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பா.உ சாணக்கியன் வீடமைப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here