- Advertisement -
Home Srilanka வடக்கு, கிழக்குத் தமிழருக்கு சஜித் அணியினரின் எச்சரிக்கை

வடக்கு, கிழக்குத் தமிழருக்கு சஜித் அணியினரின் எச்சரிக்கை

- Advertisement -

தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து வீண்விளைவுகளைச் சந்திக்க வேண்டாம் என்று வடக்கு, கிழக்குத் தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பிலும், தடையுத்தரவை மீறித் திலீபனை அஞ்சலித்த வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நல்லாட்சியில் இருந்த சுதந்திரத்தை இந்த ஆட்சியிலும் தமிழர்கள் எதிர்பார்க்கக்கூடாது. தமிழர்கள் நாட்டின் சட்டத்துக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்.

போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரத் தமிழர்களுக்கு உரிமை உண்டு. அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், உயிரிழந்த பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர இந்த நாட்டில் எவருக்கும் உரிமை இல்லை.

விக்னேஸ்வரனும், சிவாஜிலிங்கமும் புலிகளின் பாணியில் செயற்படுவதை நிறுத்த வேண்டும். நாட்டில் மீண்டும் இனவாதப் போரைத் தூண்டும் வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டதை எவரும் கண்டிக்க முடியாது. நீதிமன்றத்தின் தடையுத்தரவை எவரும் மீறினால் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். இதை அறிந்தும் திலீபனைச் சிவாஜிலிங்கம் நினைவுகூர்ந்ததை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

சாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...

உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா!!

தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...

எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here