- Advertisement -
Home Srilanka இலங்கை தொடர்பில் மிகச்சரியான வேண்டுகோள்; யஸ்மின் சூக்கா வரவேற்பு!

இலங்கை தொடர்பில் மிகச்சரியான வேண்டுகோள்; யஸ்மின் சூக்கா வரவேற்பு!

- Advertisement -

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பச்செலெட் எதிர்மறையான போக்குடைய விடயங்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டி இலங்கை குறித்து புதுப்பிக்கப்பட்ட கவனத்தை செலுத்துமாறு மிகச்சரியான வேண்டுகோளை விடுத்துள்ளார் என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும் அவருடைய அந்தக் குறுகிய அறிக்கையில் அவரால் விளக்கப்பட்டிருந்ததை விடவும் அதிகளவில் கவலைகொள்ளத்தக்கதாகவே ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகளின் நிலை காணப்படுகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான கவனம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறித்து சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்தவேண்டும்.

போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் மிச்சேல் பச்லெட் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையின் பிரகாரம், 2009 போரில் முக்கிய பங்கை வகித்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் தற்போதைய பாதுகாப்புச்செயலாளர் மேஜர் ஜெனர் கமால் குணரத்னவும் மேற்படி முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டவர்களில் அடக்கம் என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாயத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அத்தோடு ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணதண்டனைக் கைதி எனும் அதேவேளை, அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட்டமை வியப்பிற்குரியதாகும்.

மேலும் தற்போது அனைத்து அதிகாரங்களும் தனியொரு குடும்பத்தின் கைகளுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதும் வெகுவாக அவதானம் செலுத்தப்பட வேண்டியதொன்றாகும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here