- Advertisement -
Home Breaking News பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்த "பாம்பு மாஸ்க்"!

பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்த “பாம்பு மாஸ்க்”!

- Advertisement -

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்களுக்கு இருக்கும் ஒரே நடைமுறை வாய்ப்பாக முக கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் பல்வேறு நாடுகளின் அரசும் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால்,இங்கிலாந்தின் கிரேட்டர் மேன்செஸ்டரில் பயணி ஒருவர் வித்தியாசமாக மலைப்பாம்பை முக கவசம் போல மூடிக்கொண்டு பயணம் செய்த சம்பவம் சக பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஸ்வின்டொனில் இருந்து மேன்செஸ்டர் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறிய அந்த பயணி திடீரென தனது மலைப்பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு முக கவசம் போல அதை அணிந்துள்ளதாகக் கூறினார்.

அவரது செயலைப் பார்த்த சக பெண் பயணி, ஏதோ நகைச்சுவையாக பாம்பு போன்ற தோற்றம் கொண்ட பொருளை முகத்தை சுற்றி அந்த நபர் மூடியிருப்பதாகக் கருதியதாகத் தெரிவித்தார்.

ஆனால், பிறகுதான் அந்த நபர் நிஜ பாம்பை முக கவசம் போல சுற்றியிருப்பதைக் கண்டு அனைவரும் பீதியடைந்தனர்.

அந்த பாம்பு பயணியின் கழுத்தில் அமைதியாக இருந்ததாகவும், வேறு பயணிகளுக்கு அது எந்த தொந்தரவையும் தரவில்லை என்றும் பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர்.

இதை விவரித்த அந்த பெண் பயணி, நல்ல வேளையாக யாருடைய கண்ணையும் அந்த பாம்பு கொத்தவில்லை என்றார்.

இங்கிலாந்தில் பொது போக்குவரத்தில் பயணம் செய்வோர், முக கவசம் அணிவது கட்டாயமாகும். அதே சமயம், 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் உடல் சுகவீனம் உள்ளவர்கள் அல்லது முக கவசத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

“முக கவசம் என்பது அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் உறை மட்டுமின்றி பயணிகள் தங்களின் வீடுகளிலேயே முக கவசத்தை தயாரிக்கலாம் அல்லது கைகுட்டை போன்ற பொருளால் முகத்தை மூட பயன்படுத்தலாம்” என்று மேன்செஸ்டர் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வரிகளை வேறு மாதிரியாகப் புரிந்து கொண்டு பிற பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்த “பாம்பு மாஸ்க்” பயணி, தனது வளர்ப்புப் பாம்பை முக கவசமாக பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இந்த செயல் அவருக்கு புகழை தேடிக்கொடுத்திருந்தாலும், ஆபத்தான வகையில் பாம்பை பேருந்தில் கொண்டு வந்ததற்காக பலரது எதிர்ப்புக்கும் அந்த பயணி ஆளாகியிருக்கிறார்.

கிரேட்டர் மேன்செஸ்டர் போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள், முக கவசாக பாம்பை பயன்படுத்த விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி அந்த பயணியை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

114398570  114394474 bussnake

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here