Home International அல்லாஹ்வை அவதூறாக பேசியதற்காக 13 வயது நைஜீரிய சிறுவனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை

அல்லாஹ்வை அவதூறாக பேசியதற்காக 13 வயது நைஜீரிய சிறுவனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை

நைஜீரியாவின் 13 வயது சிறுவன் ஒருவன் அல்லாஹ்வை அவதூறாக பேசியதாக குற்றஞ் சாட்டி பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் வடக்கு கானோ மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தால் உமர் ஃபாரூக் என்ற சிறுவனுக்கே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நண்பன் ஒருவனுடனான வாக்குவாதத்தின் போது குறித்த சிறுவன் அல்லாஹ்வை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளான்.

இதனையடுத்து ஆகஸ்ட் 10 ஆம் திகதி சிறுவன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதையடுத்து, செப்டம்பர் 7 ஆம் திகதி வரை தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்யாததையடுத்து கடந்த புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும் இவ் தீர்ப்பு நைஜீரிய அரசியலமைப்பிற்கு சர்வதேச சட்டத்திற்கும் விரோதமானது என்று யுனிசெப் மற்றும் வழக்கறிஞர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்து குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கடந்த புதன்கிழமை, வெளியிட்டுள்ள அறிக்கையில், யுனிசெப் இந்த வழக்கைப் பற்றி ‘ஆழ்ந்த அக்கறை’ கொண்டுள்ளது என்றும், ‘தண்டனையை மாற்றியமைக்கும் நோக்கில்’ அதை அவசரமாக பரிசீலிக்க கனோவின் ஷரியா நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

‘தெய்வ நிந்தனை நைஜீரிய சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இது நைஜீரியாவின் அரசியலமைப்பிற்கு முரணானது, ” எனவும் 2001 ஆம் ஆண்டில் நைஜீரியா ஒப்புதல் அளித்த குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலனுக்கான ஆபிரிக்க சாசனம் உட்பட குழந்தைகளின் உறிமைகள் தொடர்பான அனைத்து சட்டங்களையும் இத் தீர்ப்பு மீறுவதாக வழக்கறிஞர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நீதிமன்றத்தில் சமீபத்தில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறாக பேசியதற்காக ஒருவருக்கு மரண தண்டனையை வழங்கியுள்ளது.

- Advertisement -

அதிகம் படித்தது

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...
- Advertisement -

Related News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here