Home Srilanka கல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை

கல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த நடவடிக்கை கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தர வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தலின்படி பாவனையிலுள்ள முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதுடன் புதிய பதிவு இலக்கம் வழங்கப்பட்டு அடிப்படை பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த செயற்திட்டத்தின் முதல்கட்டமாக கல்முனை நகர் பகுதிகளில் தொழில் ரீதியாக பாவனையிலுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட இருப்பதுடன், உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களும் திரட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பதிவு நடவடிக்கையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு துண்டுப்பிரசுரம் வாயிலாக கல்முனை போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கொரோனா அனர்த்தங்களினால் இடைநிறுத்தப்பட்டிருந்த இச்செயற்பாடு கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

threeweel 3 threeweel 2

- Advertisement -

அதிகம் படித்தது

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...
- Advertisement -

Related News

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...

பீ.சி.ஆர் பரிசோதனைக்கு தடையேற்படுத்திய மீனவருக்கு விளக்கமறியல்!

காலியில் மீனவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தும் போது மருத்துவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு தடைகளை ஏற்படுத்திய மீனவர் ஒருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் ஹர்சன கெக்குனுவல இன்று...

பதுளை எம்.பி அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை!

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. 20 வது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது...

டிக்கோயா- வைத்தியர் ஒருவர் சுயதனிமையில்!

கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியரும் அவரது குடும்பத்தவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார். ஹட்டன் நகரில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை செய்யும் ஒருவரை முதலில் பரிசோதித்து, அவரை...

தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5 மில்லியன்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட் யூசுப் மொஹமட் தெளபிக் மௌலவி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here