Home Srilanka களுவாஞ்சிக்குடியில் விசேட அதிரடிப் படையினருக்கு கப்பம் வழங்க முற்பட்ட இருவர் கைது!

களுவாஞ்சிக்குடியில் விசேட அதிரடிப் படையினருக்கு கப்பம் வழங்க முற்பட்ட இருவர் கைது!

சட்டவிரோதமாக சுருக்குவலையை கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினருக்கு 40 ஆயிரம் ரூபா கப்பம் வழங்க முற்பட்ட இருவர் கைதாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் எல்லைக்குட்பட்ட கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாக சுருக்குவலை பயன்பாடு அதிகரித்துள்ளதாக மீனவர்களின் குற்றச்சாட்டுக்களை அடுத்து விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் வியாழக்கிழமை(17) இரவு 9 மணியளவில் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

இதன் போது கடற் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒருதொகுதி சுருக்குவலைகளை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரான ஒருவரையும் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த குற்றச்சாட்டில் இருந்து தப்பி கொள்வதற்காக கைதான இடத்தில் வைத்து குறித்த விசேட அதிரடிப்படையின் தலைமை அதிகாரிக்கு தனது உறவினர் ஊடாக ரூபா 40 ஆயிரம் கப்பம் வழங்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கப்பம் வழங்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட நபர் உள்ளடங்களாக இரு சந்தேக நபர்களும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு கைதான இரு சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிற் திணைக்களத்தின் பிரதேசத்திற்குப் பொறுப்பான கடற்றொழில் பரிசோதகர் குழுவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் கைப்பற்றப்பட்ட சுருக்கு வலை தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட சுருக்கு வலை சுமார் பல இலட்சம் ரூபாய் பெறுமதி எனவும் அவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிற் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் கடற் பிராந்தியத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதியற்ற சுருக்குவலைகளை சிலர் பயன்படுத்துவதாகவும் அவற்றைத் தடை செய்யுமாறும் கோரி கரைவலை மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தவிர மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை, தேத்தாத்தீவு, களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், உள்ளிட்ட கடற் பிராந்தியங்களில் சட்டவிரோதமான முறையில் சிலரால் சுருக்கு வலை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது.stfg 1 696x392 1 watermarked stfg 34

- Advertisement -

அதிகம் படித்தது

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...
- Advertisement -

Related News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here