Home Srilanka காரைநகரில் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த நடவடிக்கை!

காரைநகரில் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த நடவடிக்கை!

காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், சீனோர் நிறுவனத்தின் ஊடாக பயணிகள் போக்குவரத்து படகுகளை உருவாக்கி அவற்றை கொழும்பில் பயணிகளில் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ள நிலையில் குறித்த வேலைத் திட்டம் தொடர்பிலும் ஆராயுமாறும் அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சின் செயற்றிட்ட ஆய்வு மற்றும் மீளாய்வுக் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு மாநாட்டு மண்பத்தில் இடம்பெற்ற நிலையிலேயே சீனோர் அதிகாரிகளிடம் அமைச்சர் குறித்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

மேலும், சீனோர் நிறுவனத்தின் படகு கட்டும் செயற்பாடுகள் கடந்த காலத்தில் வினைத் திறனுடன் மேற்கொள்ளப்படாமையினால் அவற்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்ட்டுள்ளதுடன் சீனோர் நிறுவனம் பற்றிய நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா, இழந்த நன்மதிப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, பயணிகள் படகுகளை உருவாக்கி கொழும்பு நகரில் பயணிகள் கோக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்தினை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காரைநகரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய ரகப் படகுகளை உருவாக்கும் உட்கட்டுமானங்களைக் கொண்ட தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவதன் மூலம் சிறிய ரகப் படகுகளை உருவாக்க முடியும் எனவும் தெவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன், கருவாடு போன்றவற்றை படிப்படியாக குறைத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவும் இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் பொறிமுறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன், கடற்றொழலில் அமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களையும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே கட்டிடத் தொகுதியில் இயங்கச் செய்வதன் ஊடாக மக்களுக்கு இலகுவான சேவையை வழங்குவதுடன் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இவை போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்ட இக்கலந்துரையாடலில், அமைச்சுக் கட்டமைப்புக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் காலவரையறை நிர்ணயித்து அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிகம் படித்தது

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...
- Advertisement -

Related News

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...

பேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது!

பேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி!

கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு...

மதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு!

மதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி...

மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா!

சீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here