Home India சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.எல்.ஏ க்கு கொரோனா... அதிர்ச்சியில் முதல்வர்!

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.எல்.ஏ க்கு கொரோனா… அதிர்ச்சியில் முதல்வர்!

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் ஜி.லோகநாதன் இவர் தற்போது நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடருக்கு செல்வதற்கு முன்பாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 14ம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அவர் கலந்துகொண்டார். பின்னர், அன்று இரவே திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் லோகநாதன் கலந்துகொள்ளவில்லை. பின்னர், வேலூர் திரும்பிய அவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவருடைய குடும்பத்தினருக்கும் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

- Advertisement -

அதிகம் படித்தது

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...
- Advertisement -

Related News

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...

முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை – கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சியின் ஆலோசனைகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் தெரிவித்துள்ளார். இவரது ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று...

பொலிஸாரின் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

மன்னார் பாஸார் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது என...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றபோது கடந்த 12.10.2020 அன்று தாக்கப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020...

வெள்ளைப்படுதல் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்களா? என்ன காரணம்..? என்ன செய்யலாம்..?

பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here