Home Srilanka சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ் மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 16.09. 2020 புதன்கிழமை இரவு நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர் நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய.

அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பிரதம பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில்.

உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் விஜயவர்த்தன பொலிஸ் கன்டபிள்களான துரைசிங்கம் திலகரட்ன உள்ளிட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இரவு சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ் கேரளா கஞ்சாவினை வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் நிந்தவூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின், 220 மில்லி கிராம் ஐஸ், 3 கிராம் கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைதான 45 ,30 ,28 ,17 ,வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் இன்று(17) சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.

q 10 q 8

- Advertisement -

அதிகம் படித்தது

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...
- Advertisement -

Related News

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...

புருணை இளவரசர் காலமானார் – 7 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

புருணை நாட்டு இளவரசர் அஸிம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். புருணை நாட்டு சுல்தானின் மகனான 38 வயதுடைய இளவரசர் அஸிம் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை...

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில்...

ஆமைகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகள் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பத்து ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர்களை வாழைச்சேனை மாவட்ட...

மட்டக்களப்பில் சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான அறிவித்தல்!

தற்போது நாட்டில் வியாபகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னாயத்த நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் சம்பந்தமாக சகல உள்ளுராட்சி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here