Home Lifestyle செரிமானம், மலச்சிக்கல் இரண்டும் வராம இருக்கணும்னா அடிக்கடி இதை சாப்பிடுங்க!

செரிமானம், மலச்சிக்கல் இரண்டும் வராம இருக்கணும்னா அடிக்கடி இதை சாப்பிடுங்க!

தானியங்கள் எப்போதுமே உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யகூடிய பொருள் தானியங்களிலும் சிறப்பு வாய்ந்தது குதிரைவாலி அரிசி.

குதிரைவாலி என்பது சிறுதானியம் தற்போது தானியங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு செய்யும் நன்மை குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

குதிரைவாலி அரிசியில் குறைந்த அளவு கலோரி உள்ளது நாம் வழக்கமாக எடுத்துகொள்ளும் அரிசி, கோதுமை உணவை காட்டிலும் இதில் அடங்கியிருக்கும் கலோரியின் அளவு மிக குறைவு அதோடு நார்ச்சத்தும் மிகுந்திருக்கு உணவாகவே இது இருக்கிறது.

குதிரைவாலி அரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, இரும்பு, மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைவாக இருக்கிறது உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பிகரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் போன்று குதிரைவாலியில் இருக்கும் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸும் அதிகம் இதுகுறித்தும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

மலச்சிக்கல் பிரச்னை உண்டாகாமல் தடுக்க முடியும். செரிமானக்கோளாறுகளும் வராமல் தவிர்க்கலாம் குதிரைவாலியில் இருக்கும் ஸ்டார்ச் ரெசிஸ்டெண்ட் செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியும் இவை கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை தாமதப்படுத்தும் இதனால் உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு குதிரைவாலி ஏற்ற உணவாகவே இருக்கிறது.

குதிரைவாலி ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால் சர்க்கரை நோயாளிகள் அவசியம் எடுத்துகொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று இதை அடிக்கடி உணவில் எடுத்துகொண்டால் சர்க்கரை எப்போதும் கட்டுக்குள் இருக்கும் இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண் சம்பந்தமான கோளாறு வரவிடாமல் செய்யும்.

குதிரைவாலி அரிசி சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது இது உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை கரைத்து வெளியேற்றும் இவை நல்ல ஆன்டி ஆக்ஸிடெண்ட் போன்று செயல்படுவதால் உடலில் இருக்கும் நச்சை நீக்கி
தூய்மையாக வைக்க உதவுகிறது.

குதிரைவாலி அரிசி உணவுக்கு பதிலாக இதை சமைத்து எடுக்கலாம் இதை சாப்பிடும் முறை தெரிந்துகொள்ள வேண்டும்.

rice
 

இதை ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து, அதன் பிறகு சமைக்க வேண்டும். தினமும் இதை எடுத்துகொள்ள வேண்டும் என்று இல்லை வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை எடுத்துகொள்ளலாம் க்ளூட்டன் பிரச்சனை இருப்பவர்களும் குதிரைவாலி அரிசியை எடுத்துகொள்ளலாம்.

வளரும் பிள்ளைகளுக்கு அவர்களது உடல் எடை, உயரம் பொறுத்து குதிரைவாலி சேர்க்கலாம் கர்ப்பக்காலத்திலும் கர்ப்பிணிகள் அவ்வபோது குதிரைவாலி அரிசியை எடுத்துகொள்ளலாம் உடலுக்கு வேண்டிய ஆற்றலை குதிரைவாலி அரிசி தருகிறது என்பதில் மாற்றமில்லை குதிரைவாலி சாப்பிட விரும்புபவர்கள் அதிகம் பாலீஷ் செய்த அரிசியை வாங்க கூடாது அதன் சத்துக்கள் நிறைவாகவே இருக்கும் குறைந்த அளவே பாலீஷ் செய்த குதிரைவாலியை பார்த்து வாங்க வேண்டும்.

இந்த குதிரைவாலியை சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை சத்துமாவு கஞ்சியிலும் சேர்க்கலாம் குதிரைவாலி அரிசியை கஞ்சியாக்கி குடிக்கலாம் வெறுமனே தயிர் சாதம் சாப்பிடும் போது குதிரைவாலி அரிசியில் செய்யலாம் அரிசியின் ருசி அமர்க்களமாக இருக்கும் இதில் சர்க்கரை பொங்கல், லட்டு, அதிரசம் போன்ற இனிப்புகளையும் சாம்பார் சாதமும் செய்யலாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காய்கறிகளை நறுக்கி சேர்த்து உப்புமா போன்று செய்து கொடுக்கலாம்.

தற்போது சிறுதானிய உணவுகளில் செய்யப்பட்ட பிஸ்கட் வகைகளும் உண்டு அதில் சிறுதானியத்துக்கும் தனி இடம் உண்டு.

- Advertisement -

அதிகம் படித்தது

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...
- Advertisement -

Related News

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...

பீ.சி.ஆர் பரிசோதனைக்கு தடையேற்படுத்திய மீனவருக்கு விளக்கமறியல்!

காலியில் மீனவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தும் போது மருத்துவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு தடைகளை ஏற்படுத்திய மீனவர் ஒருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் ஹர்சன கெக்குனுவல இன்று...

பதுளை எம்.பி அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை!

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. 20 வது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது...

டிக்கோயா- வைத்தியர் ஒருவர் சுயதனிமையில்!

கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியரும் அவரது குடும்பத்தவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார். ஹட்டன் நகரில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை செய்யும் ஒருவரை முதலில் பரிசோதித்து, அவரை...

தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5 மில்லியன்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட் யூசுப் மொஹமட் தெளபிக் மௌலவி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here