Home Spiritual புதுமனை புகும்போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்? ஆன்மிக அறிவியல் இதோ!

புதுமனை புகும்போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்? ஆன்மிக அறிவியல் இதோ!

பசுவின் கோ மாதாவாக நாம் வணங்கி வருகிறோம் பசுவின் உடலில் தெய்வங்களும், தேவ தேவதைகள் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் இருப்பதாக சொல்கிறது வேதம்.

பசுவின் கோ மாதாவாக நாம் வணங்கி வருகிறோம். பசுவின் உடலில் தெய்வங்களும், தேவ தேவதைகள் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் இருப்பதாக சொல்கிறது வேதம்

காமதேனு வழங்கும் அற்புத பொருள்

பசுவிலிருந்து பெறப்படும் பொருட்களான பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோமியம் சேர்ந்த கலவையை பஞ்சகவ்யம் எனப்படுகிறது. இது அபிஷேகத்துக்கும், விவசாயத்திற்குப் பயன்படுவதோடு, மருந்தாகவும் செயல்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

குளம்படிப்பட்ட தூசி நமது உடலில் பற்றிக் கொண்டால் நாம் நீராடிய தூய்மை உண்டாகும். நன்றாக மேய்ந்து வீடு திரும்பக் கூடிய பசுமாடுகளின் குளம்படி பட்டு கிளம்பக் கூடிய தூசி கிளம்பக் கூடிய வேளையை நல்ல வேளையாக பார்க்கப்படும் (கோதூளி லக்னம்) என முகூர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

திருநீறு

அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடக்கூடிய சாணத்தை உருண்டையாக்கி அதை நன்றாக காயவைத்து, உமியில் மூடி புடம் போட்டு எடுக்கப்படும் போது திருநீறு எனும் உன்னதமான மந்திர மருந்துப் பொருள் உருவாகிறது.

நாம் தினமும் அந்த திருநீறை அணிந்து வர பல தோஷங்கள் நிவர்த்தியாவதோடு, பயம் நீங்கும் திருநீறு அணிந்து மந்திரத்தை உச்சரிப்பதால் பலன்கள் அதிகரிக்கும்.

நீராடியதும் நாம் திருநீற்றை அணிந்து கொண்டால் உடலும், மனமும் முழு தூய்மையாகும் என்கிறது சாஸ்திரம்.

பாவம் நீங்க

தான, தர்மங்கள் பல வகையாக கொடுக்கப்படுகின்றது அதில் பசு தானம் செய்பவருக்கு தான் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறது தர்மசாஸ்திரம்.

பசுவை பேணி பாதுகாத்து வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணனும், கோபியர்களும் அதனால் தான் கோபாலன் என்ற பெயர் வந்தது.

புதுமனை புகுவிழாவில் பசுவும் கன்று குட்டியும்

பசுவின் பாதம் பட்ட இடம் பரிசுத்தமாகும் என்பதால் தான் புதுமனை புகுவிழாவில் பசுவும் கன்று குட்டியும் முதலில் அழைத்துச் செல்லப்படுகிறது. இதனால் புதுமனையில் இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் நீங்கி தூய்மை உண்டாகும்.

பசுவை வெறும் கால்நடையாக பார்ப்பதை விடுத்து, அதனுள் ஒட்டுமொத்த தெய்வங்கள், தேவ, தேவதைகள் அடங்கியிருப்பதை உணர வேண்டும்.

பசுமாடு புதுவீட்டில் அழைத்துச் செல்வதால் மகிழ்ச்சி வரமாக அமையக் கூடும்.

- Advertisement -

அதிகம் படித்தது

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...
- Advertisement -

Related News

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர்! நாசா அறிவிப்பு

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. செய்மதி தொழிநுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய சந்திரனில் இயற்கையான தண்ணீர் இருப்பதை உறுதியாக கூற முடியும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சோபியா...

நிலவில் நீராதாரம் – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2008ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான் செயற்கைக்கோள் மூலம், நிலவின் மேற்பரப்பில் நீராதாரம் இருக்கலாம் என...

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது. குவாதமாலா நாட்டில் உள்ள மயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி...

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்- இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது; தொற்றுநோய் தடுப்பு பிரிவு!

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here