Home Srilanka 20ஆவது திருத்தச் சட்டத்த்தை பயன்படுத்தி, சீனர்களும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஆகி விடுவர்!

20ஆவது திருத்தச் சட்டத்த்தை பயன்படுத்தி, சீனர்களும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஆகி விடுவர்!

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத்  திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனாவின் காலனியாக மாறி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

17ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள், 18ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர். 18ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள் 19வது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர்.

தற்போது அவர்களே 20ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரிக்க தயாராகி வருகின்றனர். இதுதான் எமக்குள்ள பிரச்சினை.

தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை பயன்படுத்தி கடந்த காலத்தில் செயற்பட்டது போல் எவரும் செயற்பட முயற்சித்தால், அது வரலாற்று ரீதியாக செய்யும் தவறு.குறிப்பாக இரட்டை குடியுரிமையை எடுத்து கொண்டால், 25 லட்சம் ரூபாவை வங்கி வைப்பில் காட்டி சீனர்களும் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கை பிரஜை எனக் கூறி நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.

எப்படி இது நடக்கும் என்றே நான் நினைக்கின்றேன். இலங்கை சீனாவின் காலனியாக மாறிதானே வருகிறது.

அத்துடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரும் இதனை செய்ய முடியும். அதேபோல் இந்திய பிரஜையும் நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.

நாட்டின் மீது அளவு கடந்த அன்பு இருந்தால், ஏன் குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு நாட்டில் அரசியலில் ஈடுபட முடியாது?. புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும்.

கொள்முதல் மற்றும் கணக்காய்வு விடயங்களை எடுத்துக்கொண்டால் மிகவும் பாரதூரமான இடத்தில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காணப்படுகிறது.

ஒரு குடும்பத்திற்கு ஏற்ற வகையில் இதனை செய்ய முடியாது என நாங்கள் நினைக்கின்றோம். அந்த நிலைமையை கடந்து வந்து விட்டோம்.

இதனால் விரிவான கலந்துரையாடல்கள் மூலம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அதிகம் படித்தது

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...
- Advertisement -

Related News

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர்! நாசா அறிவிப்பு

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. செய்மதி தொழிநுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய சந்திரனில் இயற்கையான தண்ணீர் இருப்பதை உறுதியாக கூற முடியும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சோபியா...

நிலவில் நீராதாரம் – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2008ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான் செயற்கைக்கோள் மூலம், நிலவின் மேற்பரப்பில் நீராதாரம் இருக்கலாம் என...

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது. குவாதமாலா நாட்டில் உள்ள மயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி...

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்- இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது; தொற்றுநோய் தடுப்பு பிரிவு!

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here