Home Srilanka எக் காரணத்திற்காகவும் அரிசி விலை அதிகரிக்கப்படாது- பந்துல குணவர்தன!

எக் காரணத்திற்காகவும் அரிசி விலை அதிகரிக்கப்படாது- பந்துல குணவர்தன!

சந்தையில் அரிசி விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உறுதியாளித்துள்ளார்.

அரிசி தொடர்பாக வர்த்தக சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்புகளை அழைத்து அமைச்சர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

நுகர்வோருக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது என அமைச்சர் கூறினார்.

நெல்களை பதுக்கி வைத்திருக்கும் அரிசி வர்த்தகர்கள் மற்றும் விலைகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அவற்றை சந்தைக்கு வெளியிடாதவர்கள் பற்றிய தகவல்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ளன என்றும் அவர் கூறினார்.

எனவே அரிசியை மொத்தமாக வர்த்தக சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்காதிருந்தால், எந்தவொரு விலையும் அதிகரிக்காமல் நுகர்வோரின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய அமைச்சரவையின் ஒப்புதலுடன் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

- Advertisement -

அதிகம் படித்தது

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...
- Advertisement -

Related News

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...

முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை – கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சியின் ஆலோசனைகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் தெரிவித்துள்ளார். இவரது ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று...

பொலிஸாரின் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

மன்னார் பாஸார் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது என...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றபோது கடந்த 12.10.2020 அன்று தாக்கப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020...

வெள்ளைப்படுதல் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்களா? என்ன காரணம்..? என்ன செய்யலாம்..?

பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here