Home Breaking News என் உடலை உறுதி செய்த மாஸ்டருக்கு நன்றி; நடிகர் சூரி!

என் உடலை உறுதி செய்த மாஸ்டருக்கு நன்றி; நடிகர் சூரி!

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஊக்கப்படுத்தும் தனது பயிற்சியாளருக்கு நடிகர் சூரி நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி சுசீந்திரனின் ’வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரானார். தொடர்ச்சியாக, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களின் நண்பராக காமெடியில் கலக்கி வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ’சீமராஜா’ படத்தில் தமிழ் காமெடி நடிகர்களில் முதன்முறையாக சிக்ஸ் பேக் வைத்து எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

பொதுவாக ஹீரோக்கள்தான் உடலை ஃபிட்னசாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், சூரி அப்படியல்ல.

எப்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக மாறினாரோ அப்போதிலிருந்தே உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த ஆர்வம்தான் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவும் வைத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது உடற்பயிற்சிக்கான உந்துதல் எனது மாஸ்டர்தான். என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி” என்று தனது ஃபிட்டான புகைப்படத்துடன் நன்றியுணர்வோடு பதிவிட்டுள்ளார்.

1600522833466

(சூரி உடற்பயிற்சியாளர் சரவணன்)

- Advertisement -

அதிகம் படித்தது

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
- Advertisement -

Related News

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

விசேட பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ரிஷாட்

விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினால் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ரிஷாட் பதியூதின் அழைத்து வரப்பட்டிருந்தார். விசேட பாதுகாப்பு உடை அணிந்து ரிஷாட் பதியூதின்...

யார் இந்த மாகந்துர மதுஷ்? (கட்டுரை)

பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமரசிங்க ஆரச்சிகே மதுஷ்...

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு !

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு ! தம்மை கைது செய்யக் கூடாதென உத்தரவிடக் கோரி ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் ஆரம்பம்!!

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் நாளை (22) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயத்தை தவிர்ந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here