Home Srilanka சுற்றிவளைப்பில் மூவர் கைது; துப்பாக்கிகள் மீட்பு!

சுற்றிவளைப்பில் மூவர் கைது; துப்பாக்கிகள் மீட்பு!

நாட்டின் சில பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அலவ்வ
அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமாஉல்ல, 7ஆம் கட்டை பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் 4 துப்பாக்கி ரவைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உருலுமுல்ல – அலவ்வ பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தெரணியகல
தெரணியகல – மியனவிட்ட பகுதியில் சீதாவக்கபுர குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 12 வகை வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை வீதி – மியனவிட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயது மதிக்கத்தக்கவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவை
கலுபே – ஹிக்கடுவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கல்கட்டஸ் வகை உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சுற்றிவளைப்பை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையக அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறு கலுபே – ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அதிகம் படித்தது

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...
- Advertisement -

Related News

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...

பேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது!

பேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி!

கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு...

மதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு!

மதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி...

மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா!

சீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here