Home Breaking News தேவையான அதிகாரங்களை உருவி எடுக்கும் கோட்டாபய

தேவையான அதிகாரங்களை உருவி எடுக்கும் கோட்டாபய

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றமை போல அரசமைப்புக்கான 20வது திருத்தம், ஆளும் தரப்பினால் பெரும் ஆரவாரத்தோடு முன்வைக்கப்பட்டாலும், அது உள்வீட்டுக்குள் பெரும் களேபரத்தை ஏற்படுத்தி விட்டது என்பது உண்மை தான் என விடயமறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஜனாதிபதியிடமிருந்த சில முக்கிய நிறைவேறறதிகாரங்களை அவரிடம் இருந்து நீக்கி, பிரதமரிடமும், அவரின் கீழ் இயங்கும் நாடாளுமன்றத்திடமும், கையளிக்கும் கைங்கரியத்தையே முன்னைய நல்லாட்சி அரசு செய்திருந்தது.

அதை மீள ஜனாதிபதியிடம் திருப்பும் ஏற்பாட்டையே 20வது திருத்தம் கொண்டிருக்கின்றது. வெளிப்படைக்குப் பார்த்தால் நல்லாட்சி அரசு செய்ததை சரிப்பண்ணுகின்றது பொதுஜன பெரமுன அரசு என்பது தான் தோற்றம். ஆனால், விவகாரம் அப்படியல்ல. அதையும் தாண்டி, வேறு பரிமாணங்களைக் கொண்டது இது.

பிரதமரான மஹிந்த ராஜபக்ச வசம் இப்போது இருக்கும் அதிகாரங்கள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, அவரால் ஜனாதிபதி பதவிக்குக் கொண்டு வரப்பட்ட அவரது தம்பியார் கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்கப்படப் போகின்றன. அதற்கான ஒழுங்குகளைச் செய்யும் அரசமைப்புத் திருத்தம் தான் இந்த 20வது திருத்தச் சட்டமூலம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனிப்புக்கும், பரிசீலனைக்கும், ஆய்வுக்கும், பரிந்துரைக்கும் செல்லாமலேயே அது வர்த்தமானியில் பிரசுரமாகி விட்டமைதான் இப்போதைய உள்வீட்டுப் பரபரப்புகளின் மூலச் சிக்கல் என்கின்றன சம்பந்தப்பட்ட வட்டாரங்கள்.

அதனால்தான் அந்த 20வது திருத்தச் சட்டத்தைத் தயாரித்தவர் யார், அதன் பின்புலம் யாது என்றெல்லாம் சர்ச்சை கிளப்பப்பட்டது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அதனையே விவகாரமாக எடுத்துக் கொண்டு பிரசாரச் சர்ச்சையை உலவ விட்டது.

20வது திருத்தத்துக்கான வரைவைத் தான் தயாரிக்கவில்லை என்றும், 20வது திருத்தம் என் குழந்தை என்ற சாரப்படவும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவசரப்பட்டு பகிரங்க மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டி வந்ததும் இதனால்தான்.

அண்ணன் – தம்பி அதிகார சர்ச்சையில் தம் தலையை உருட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லைப் போலும்.

தமக்குத் தெரியாமல் அவசர அவசரமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட இருபதாவது திருத்த வரைவு குறித்து ஆராய்வதற்கு அமைச்சர்கள், எம்.பிக்களைக் கொண்ட விசேட குழு ஒன்றை நியமித்து, இரண்டு நாள் அவகாசத்தில் அது குறித்துப் பரிசீலித்து பரிந்துரை சமர்ப்பிக்கும்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணித்தமை கூட இந்தப் பின்புலத்தில்தான்.

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட இருபதாவது அரசமைப்புத் திருத்த வரைவு குறித்து ஆளும் தரப்புக்குள் பல பிரநிதிகளும் குத்தி முறிந்து, அறிக்கை விட்டு, களேபரம் பண்ணியமை கூட இந்த முரண்பாட்டு நிலைமையின் பின்னணியில்தான்.

ஆனால், அவை எல்லாவற்றுக்கும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரே ஆப்பு வைத்துத் தமது தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட எல்லோரையும் கப் சிப் என அடங்கச் செய்திருக்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

“20வது திருத்த வரைவு என்னால்தான் தயாரிக்கப்பட்டது. நானே அதற்குப் பொறுப்பு. அது திருத்தப்பட மாட்டாது. புதிய வர்த்தமானி அறிவித்தல் ஏதும் விடுவிக்கப்படமாட்டாது.

ஏற்கனவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வடிவத்திலேயே அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். ஏதேனும் மாற்றம், திருத்தம் செய்ய வேண்டுமானால் அந்த வரைவு மீதான குழு நிலை விவாதத்தில் அதைப் பார்த்துக் கொள்ளலாம்’ – என்ற பாணியில் ஒரு போடு போட்டிருக்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய.

அவ்வளவு தான். 20வது திருத்தத்தில் அது பிழை, இது தவறு, இதனை மாற்ற வேண்டும், அதனை சரி செய்ய வேண்டும் என்றெல்லாம் துள்ளிக் குதித்த தரப்புகள் யாவும் சத்தமின்றி அடங்கிப் போயினவாம்.

20வது திருத்த வரைவைப் பரிசீலித்து, ஆராய்ந்து, செய்யப்பட வேண்டிய மாற்றங்களை சிபாரிசு செய்வதற்காக அமைச்சர் மற்றும் ஆளும் தரப்பின் மூத்த தலைவர்களை நியமித்த பிரதமர், அந்தக் குழுவினர் தயாரித்து வழங்கிய விசேட பரிந்துரை அறிக்கையைத் தமது கோவையில் அமைச்சரவைக்கு எடுத்து வந்தாராயினும், ஜனாதிபதியின் திட்டவட்டமான அறிவிப்பை அடுத்து அந்தக் கோவையைத் திறக்கவுமில்லை, அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுமில்லை என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆக, 20வது திருத்தத்தின் தந்தை ஜனாதிபதி கோட்டாபய தான். தமக்குத் தேவையான நிறைவேற்று அதிகாரங்களை நாடாளுமன்றம் மூலம் அவர் பிடுங்கி – உருவி – தோண்டி – எடுக்கப் போகின்றார். அவ்வளவு தான்.

அதற்கு இந்த நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் உதவி, ஒத்துழைத்து, உடந்தையாகி வரலாற்றுத் தவறு இழைக்கப் போகின்றார்களா என்பது தான் இப்போது நம் முன்னால் உள்ள ஒரே கேள்வியாகும்.

- Advertisement -

அதிகம் படித்தது

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற...
- Advertisement -

Related News

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற...

ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கும் ‘20’ – கோட்டாபயவிற்கு பறந்த ஓமல்பே சோபித தேரரின் கடிதம்!

20வது திருத்தசட்டம் நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குரிய நிலைக்குள்ளாக்கும் எனத் தெரிவித்து ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது தங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள 20வது...

மருத்துவமனைக்கு வந்த குழந்தைக்கும் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி!

பொரெல்ல குழந்தைகள் மருத்துவமனையில் 2 வயதும் 6 மாதமும் உடைய குழந்தை மற்றும் அவரது தாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் -19 பரவல் தடுப்பு செயல்பாட்டு மையம் இதை அறிவித்துள்ளது. குழந்தையும் தாயும்...

சிறையில் நலமுடன் இருக்கிறேன்- விரைவில் விடுதலை; சசிகலா கடிதம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் நலமுடன் உள்ளதாகவும் தனது விடுதலை குறித்து கர்நாடக...

தமிழ் றொக்கர்ஸ் இணையத்தளம் நிரந்தரமாக மூடப்படுகிறது?

திரைப்படங்களை சட்டவிரோதமாகப் பதிவேற்றிப் பகிர்ந்து வந்த முக்கிய இணையதளங்களில் ஒன்றான தமிழ் றொக்கேர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ் றொக்கேர்ஸ் என்று பெயர் இருந்தாலும், தமிழ், ஹிந்தி, கன்னடம்,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here