Home Sports IPL 2020- முதல் போட்டியில் சென்னை அணிக்கு 163 ஓட்டங்கள் இலக்கு!

IPL 2020- முதல் போட்டியில் சென்னை அணிக்கு 163 ஓட்டங்கள் இலக்கு!

கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 163 ஓட்டங்களை சென்னை அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

முதல் போட்டி, அபுதாபியில் உள்ள செய்க் ஷயெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (சனிக்கிழமை) மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, குயின்ரன் டி கொஹ் மற்றும் திவாரி ஆகியோரின் நிதான துடுப்பாட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், சவுரப் திவாரி 42 ஓட்டங்களையும் குயின்ரன் டி கொஹ் 33 ஓட்டங்களையும் பொல்லார்ட் 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்னை அணி சார்பில், லுங்கி நெகிடி மூன்று விக்கெட்டுகளையும் தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு, சாம் ஹியுரன் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 163 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

- Advertisement -

அதிகம் படித்தது

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...
- Advertisement -

Related News

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர்! நாசா அறிவிப்பு

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. செய்மதி தொழிநுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய சந்திரனில் இயற்கையான தண்ணீர் இருப்பதை உறுதியாக கூற முடியும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சோபியா...

நிலவில் நீராதாரம் – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2008ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான் செயற்கைக்கோள் மூலம், நிலவின் மேற்பரப்பில் நீராதாரம் இருக்கலாம் என...

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது. குவாதமாலா நாட்டில் உள்ள மயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி...

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்- இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது; தொற்றுநோய் தடுப்பு பிரிவு!

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here