Home Srilanka இறுதியில் பிரபாகரனுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் கவலையடைந்தேன்! பிள்ளையான்

இறுதியில் பிரபாகரனுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் கவலையடைந்தேன்! பிள்ளையான்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யுத்தத்தின் இறுதியில் நடந்தது தொடர்பான செய்தியைக் கேட்ட பின்னர் மிகவும் வேதனையாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தலைவர் மறைந்த செய்தியை கேட்டதும் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன், மதியம் மற்றும் இரவில் உணவருந்த கூட முடியாமல் மிகவும் கவலையாக இருந்தது. இது ஒரு இயல்பான விடயம். என்னதான் எதிரியாக இருந்தாலும் அவர்களது இறப்பில் கவலைகொள்வது சாதாரணமான விடயம். அது இயல்பு.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலகுவதாக அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் என்னை அழைத்துப் பேசியிருந்தார். பிள்ளையான் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் போல இருக்கு, நாங்கள் தனியாக இயங்குவது பற்றி யோசிக்கலாம் என தெரிவித்தார்.

அதற்கு நான், நீங்கள் முடிவு எடுத்தால் அதற்கு நான் உடன்படுகின்றேன். ஆனால் அந்த முடிவு ஊடகங்களில் பெரிதாக்கப்பட்டு, நிரந்தரமாக பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டால் எல்லாமே முடிந்து போய்விடும். எனவே கவனமாக முடிவெடுங்கள் என நான் தெரிவித்தேன்.

அதன் பின்னர் சில தினங்களில் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து விட்டதாக ஊடகங்களில் பார்த்தவுடன் மிகவும் வேதனையடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தமுறை நடந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். கடந்த காலங்களில் எனது செயற்பாட்டை மக்கள் நம்பியிருக்கின்றார்கள் என்பதன் வெளிப்பாடே இந்த முறை எனக்கான வெற்றி.

கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நான் பழிவாங்கப்பட்டேன். இதனை உறுதியாக கூற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

அதிகம் படித்தது

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
- Advertisement -

Related News

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

விசேட பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ரிஷாட்

விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினால் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ரிஷாட் பதியூதின் அழைத்து வரப்பட்டிருந்தார். விசேட பாதுகாப்பு உடை அணிந்து ரிஷாட் பதியூதின்...

யார் இந்த மாகந்துர மதுஷ்? (கட்டுரை)

பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமரசிங்க ஆரச்சிகே மதுஷ்...

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு !

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு ! தம்மை கைது செய்யக் கூடாதென உத்தரவிடக் கோரி ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் ஆரம்பம்!!

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் நாளை (22) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயத்தை தவிர்ந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here