Home Breaking News தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல்? மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல்? மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு மாவட்ட மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி சிறைப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி பன்குடாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வருமாறு அழைத்த அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் அவர் அங்கு வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து வைத்த அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் சம்பவ இடத்திற்கு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் பொலீசார் உடன் வரவேண்டும் என கூறியுள்ளார்.
பின்னர் பொலீசார் வந்து பிக்குவுடன் சமாதானம் பேசி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.
பிக்குவால் தாக்கப்பட்ட மூன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் கரடியணாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் அடித்ததில் காயமடைந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூன்று பேர் கரடியணாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற கட்டளைக்கு அமைய தொல்பொருள் அடையாளங்கள் உள்ள பகுதிகளை தவிர ஏனைய வயல் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் செங்கலடி பன்குடாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய வயல் காணிகளை விவசாயிகளிடம் மட்டக்களப்பு தொல்பொருள் திணைக்கள ஒப்படைத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் சம்பவ இடத்திற்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை அழைத்து தாக்கியதுடன் அவர்களை சிறைப்பிடித்து வைத்துள்ளார்.
பொண்ணம்பலம் மதன்(32),தர்மராஜா ஜெசிதரன்(36), அம்பாறை தொல்பொருள் திணைக்கள அதிகாரி லால் கேமந்த ஜெயலத்(36) என்ற மூன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளே அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் அவர்களின் தாக்குதல் காரணமாக மட்டக்களப்பு கரடியணாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

- Advertisement -

அதிகம் படித்தது

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...
- Advertisement -

Related News

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...

பேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது!

பேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி!

கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு...

மதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு!

மதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி...

மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா!

சீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here