Home Breaking News சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - மத்திய மாகாண ஆளுனர்

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – மத்திய மாகாண ஆளுனர்

கண்டி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் துரிதமாக ஆராய்வதோடு, அவற்றில் அபாயமுடைய கட்டடங்கள் காணப்படுமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி லலித் யு கமகே குறிப்பிட்டார்.

சட்டவிரோத கட்டடங்களால் காணப்படும் அபாய நிலைமைகள் தொடர்பில் மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி லலித் யு கமகே தலைமையில் திங்கட்கிழமை கண்டியில் உள்ள மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தின் பொறியியலாளர் சேவையின் பிரதி பொதுச் செயலாளர் , மாகாண பொறியியலாளர் சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் , கண்டி நகரசபை நகர பொறியியலாளர் , நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் , கண்டி – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் , புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

கண்டி மாவட்டத்தில் காணப்படுகின்ற சட்டவிரோத கட்டடங்கள் பற்றி இதன் போது இவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தந்திரமாக நகரத்திற்குள் சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. தரமற்றதும் கட்டுமானத்திற்கு பொருந்தாத பொருட்களைப் பயன்படுத்தி சிலர் ஆபத்தான கட்டடங்களை கட்டியுள்ளமை இதன் போது தெரியவந்துள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த ஆளுனர் , சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் துரிதமாக ஆராயுமாறும் , அவற்றில் அபாயமுடைய கட்டடங்கள் காணப்படுமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார்.

- Advertisement -

அதிகம் படித்தது

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...
- Advertisement -

Related News

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர்! நாசா அறிவிப்பு

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. செய்மதி தொழிநுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய சந்திரனில் இயற்கையான தண்ணீர் இருப்பதை உறுதியாக கூற முடியும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சோபியா...

நிலவில் நீராதாரம் – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2008ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான் செயற்கைக்கோள் மூலம், நிலவின் மேற்பரப்பில் நீராதாரம் இருக்கலாம் என...

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது. குவாதமாலா நாட்டில் உள்ள மயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி...

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்- இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது; தொற்றுநோய் தடுப்பு பிரிவு!

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here